எந்திரன் என்ற பிரம்மாண்டப் படைப்பின் 2ம் பாகமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்பில், 3D தொழில்நுட்பத்தில் வெளியாகி இருக்கும் 2.0 எப்படி இருக்கிறது?
தலைவர் சூப்பர் ஸ்டார் எப்படி அசத்தியிருக்கிறார் என்று காண வேண்டிய ஆர்வம் அனைவரிடத்திலும்!
அப்படி என்ன புதுமை செய்திருக்கிறார் ஷங்கர்?
பல முறை அடித்துத் துவைத்து வெளுக்கப்பட்ட பழைய பழி வாங்கும் கதை!
அதில் அறிவியலை மையமாக வைத்து ஒரு பார்வை! இதில் பேய்க்கு “Aura” என்று பெயர் வைத்து விட்டனர்.
அதிலும் இதில் பழி வாங்குவது, தற்கொலை செய்துகொண்ட பக்ஷிராஜனின் பேய் என்பதால்,
இதைப் பேய் படமாகவும் கருதலாம்!
கதை நமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதால், திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு!
ஆனால், அதை மறைக்க முடிந்தவரை கிராபிக்ஸ் முயற்சிக்கிறது!
குறிப்பாக திரைக்கதையில் “ஐ” திரைப்படம் கண் முன் வந்து போகிறது! அதில் விக்ரம் தன் துன்பத்திற்குக் காரணமானவர்ளை, எப்படிப் பழவாங்குவாரோ, அதே போல இங்கு அக்ஷய் குமார்!
அக்ஷய் குமார் எப்படி “5th ஃபோர்ஸ்” ஆனார் என்பதில் தெளிவின்மை!
ஆனாலும், அதற்கு ஈடு கொடுக்க சிட்டியை மீண்டும் கொண்டு வருகிறார் வசீகரன்!
பின் 2.0 & 3.0 எல்லாம் வருகிறது! 3.0 குழந்தைகளைக் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், அது பேசும் வசனங்களில் நமக்கு என்னமோ எரிச்சல் உண்டாகிறது.
படத்தில் எதற்காக பாடல் காட்சிகள் எடுக்கப் பட்டது என்பதே தெரியவில்லை. அதில் சில கோடிகளை சேமித்து இருக்கலாம்!
வசீகரனாக அதே ரஜினி இன்னும் மிளிர்கிறார்!
ஆனால், மற்ற எந்திரர்களாக ரஜினியின் முகத்தில் அத்தனை அயர்சி!
அவரது வயது மூப்பு, அசைவுகளில் தெரிகிறது!
இருந்தும் முடிந்தவரை ரசிகர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்!
அக்ஷய் குமார் அபாரம்! மிரட்டி இருக்கிறார்! ஆனால் ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் போன்ற படங்களில், Flashback காட்சிகள் எர்ப்படுத்திய தாக்கம், இதில் வரும் பக்ஶிராஜனின் Flashbackல் இல்லை.
பின்னணி இசை நன்றாகவே இருந்தாலும், எந்திரனின் பின்னணி இசை வரும் போதே திரையரங்கம் அதிர்கறது!
வசனங்களில் சுஜாதா இல்லாதது, பெரும் தொய்வையே தருகிறது!
வசீகரன் பாராட்டு விழா காட்சி, முதல் பாகத்தின,
*என் கடவுள் வசீகரன்* காட்சி மீண்டும் பார்த்தது போல பழைமை!
AIRD மையம் மிகவும் பரிதாபம்! பாதுகாப்பே கிடையாது போல! யார் யாராே சென்று திருடி வருகிறார்கள்!
வசீகரனுள் ஆவி புகுந்து மாறி மாறி பேசுவது, “அந்நியன்” கிளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கும் நினைவு! ஆனால் மிகவும் கடுப்பேற்றுகிறது!
படத்தில் ரஜினி & மயில்சாமி இந்த இரண்டு நடிகர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் உதட்டு அசைவுகள் கவனிக்கப்படவில்லை.
தொழில்நுட்பம் அருமை!
அனைவரும் மிரட்டி இருக்கிறார்கள்! இந்தப் படத்தில் உண்மையான நாயகன், “கிராஃபிக்ஸ்” மற்றும் அதை உருவாக்கிய அந்த டீம் மட்டுமே!
மொத்தத்தில் பழைய பேய் பழி வாங்கும் கதைதான்!
ஆனால், அதில் கிராபிக்ஸ் உதவியோடு, திரையில் ஷங்கர் காட்டியிருக்கும் மாயாஜாலத்திற்கு சல்யூட்!
Climax காட்சியில், எங்கிருந்து அத்தனை குருவிகள் வந்தன என்பது ஷங்கர் அவர்களுக்கே வெளிச்சம்!
குறிப்பு:- இந்தப் படத்தில் எமி ஜாக்சன் இருக்கிறார்.
முக்கியக் குறிப்பு:- இந்தப் படம் பார்க்கச் செல்வதற்கு முன் ஒரு துண்டுத் தாளில்,
- Pride of Indian Cinema
- இதை ரசிப்பவர்களே ரசனையாளர்கள்
- இதை ரசிக்காதவர்களுக்கு ரசனை மட்டு
என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எப்பொழுதெல்லாம் திரைக் கதையில் தொய்வு தெரிகிறதோ, அப்பொழுது இதை எடுத்துப் படியுங்கள். உங்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.
ஷங்கர் என்பவர் ஒரு மாபெரும் படைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காலத்தால் அழிக்க முடியாத பல படங்களைத் தந்தவர் அவர்!
ஆனால் இன்று, அவர் கதையில் நம்பிக்கை வைப்பதை விட, கிராஃபிக்ஸ் மீது அதிக நம்பிக்கை கொண்டுவிட்டாரோ என்ற அய்யம் தோன்றுகிறது!
பாகுபலி மூலம், இந்தியாவின் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்தை “ராஜமௌலி” பெற்றுவிட்டாரோ என்ற அய்யம் ஷங்கருக்கு வந்திருக்கலாம்! ஆனால், இருவருமே இந்தியாவின் பெருமைகள்தான்! இந்தியன் 2 மூலம் பழைய ஷங்கர் அவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில்…
ரசிகன்,
பத்ரிநாத் சீனிவாசன்.